Sonntag, April 10, 2005

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்...!

- விவேகன் -
நன்றி - ஈழமுரசு(செப்-ஒக்டோ2004)

Kommentare:

Anonym hat gesagt…

//கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்...!//

அதனால தான் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றும் தமிழனை காட்டுமிராண்டி என்றும் பெரியார் சொன்னாரோ?

ஜீவா (Jeeva Venkataraman) hat gesagt…

நல்ல விளக்கம். இப்படி நான் யோசித்ததில்லையே!

சோழியான் hat gesagt…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த மொழி

கல்தோன்றி.. அதாவது கற்காலம்தோன்றி, மண் தோன்றா... அதாவது எனது மண் உனது மண் எனும் உரித்துடைய எல்லைகள் தோன்றாத காலத்தே தோன்றிய மொழி என ஏன் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது? கவனிக்கவும்.. கல் தோன்றா காலத்தே அல்ல.. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே என்பதுதான் சரி.. சொற்களை மாற்றிப்போட்டு தவறான அர்த்தம் கற்பிக்கும் செயல்கள் ஏற்புடையனவல்ல.. அண்ணாந்து பார்த்து உமிழ்வது போன்றது. நன்றி.

Chandravathanaa hat gesagt…

ஜீவா, இராஜன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

வசந்தன்(Vasanthan) hat gesagt…

அவன் காற்றாக இல்லை. கடவுளாக இருந்தான்.

Chandravathanaa hat gesagt…

வசந்தன்

ஒவ்வொரு மனிதனும் கடவுளானால் எத்தனை கடவுள்கள் எம்முன்...?
அத்தனை கடவுள்கள் இருக்கையில் உலகில் இத்தனை அவலங்கள் ஏன்...?

வசந்தன்(Vasanthan) hat gesagt…

கல் தோன்றி என்று தொடங்கி ஒருத்தன் எழுதினத வச்சு இவ்வளவு கதைக்கிறதப் பாக்க, அதுக்க அதுக்கு முதல் தமிழன் எப்பிடி இருந்தான் எண்டு ஒருத்தர் கேக்க, இப்பிடித்தான் பதில் சொல்லத் தோன்றீச்சு, சொன்னன்.
கடவுளாக இருந்தான் எண்டு தான் சொன்னான். இருக்கிறான் எண்டு சொல்லேல. கடவுள் எண்டா மட்டும் என்ன திறமே? சொல்லப்போனா கடவுள்கள விட மனுசனே மேல் தெரியுமா?

Sri Rangan hat gesagt…

இது ரொம்பத் தேவையற்ற விவாதம்.ஒவ்வொரு இனத்திற்கும் தத்தமது மொழியூடான ஆழ்மனப் புரிதல்களில் பற்பல வேளை மிகுதியான பெருமிதம் உண்டு.அது மொழிவழி வந்ததுவல்ல.ஆளுமைசார்ந்த கோடிடுவதால் வந்தது.இது மனித உடலினது அரசியற்போக்கை ஆழ்மனதில் ஊன்றியதன் வாயிலாகவும்-வரலாறு பூராகவும் தமிழ்பேசும் மனிதர்கள் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டு,அவர்தம் பண்பாடுகள் அழிவுக்குள்ளானபோது-அதை எதிர்த்து அன்றைய தமிழுணர்வுமிக்க ஒருவா அப்படியெழுதியுள்ளார்.இதை ஏன் இப்போ கிண்டல் செய்வான்?இந்த வார்த்தை மாற்றாரைக் காவுகொள்வதற்கான அரசியலை முன்னெடுத்தால் நிச்சியம் எதிர்ப்பது நியாயம்தாம்.ஆனால் அப்படியில்லாதிருக்கும்போது அந்த வார்த்தையின் மானுடநோக்கைத் தேர்வுசெய்யும் அரசியலாக்க முனைவது சற்றும் அறிவார்ந்த நோக்கல்ல.
ப.வி.ஸ்ரீரங்கன்

Chandravathanaa hat gesagt…

கடவுள் எண்டா மட்டும் என்ன திறமே? சொல்லப்போனா கடவுள்கள விட மனுசனே மேல் தெரியுமா?

நன்றி வசந்தன்.

Chandravathanaa hat gesagt…

சிறீறங்கன்
உங்கள் கருத்துக்கு நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

சோழியான் hat gesagt…

கடவுள் என்றா எல்லைகள் அற்றவன்.. தமிழனின் கடவுள் யார்? அல்லது எது? அதை சற்று ஆராய்ந்து சொல்லுங்களேன்!
சைவர், சைவம் என்றும் சொல்லுறாங்க.. அதற்காவது அர்த்தத்தை சொல்லுங்களேன்.. அதற்குப் பிறகு கடவுளா மனிதனா மேலானவன் எனப் பார்க்கலாம். :))
அன்புடன், இராஜன்

Anonym hat gesagt…

கடவுள் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான்.

Anonym hat gesagt…

நூலிடையாள், மீன் விழியாள், கொவ்வை இதழாள், மாம்பழக் கன்னத்தாள் என்று கவிஞர் சொல்வார்கள். இத்தனையும் அப்படியே அமைந்தால் அப் பெண் எப்படி இருப்பாள்? கவிஞர் மிகைப்படக் கூறுவது அந்த அழகைக் கவிதையைப் படிப்பவர் தங்கள் கற்பனையில் இரசிப்பதற்கே. தமிழின் பழமையைக் கூறக் கவிஞர் சொன்னதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கின்றீர்களே. சிந்திக்கச் சில சுவைக்கச் சில. பழமையை இதைவிட அழகாக எப்படிச் சொல்ல முடியும்?

Several tips hat gesagt…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
enpathu thaan sariyanathu.

ஆதி hat gesagt…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த மொழி

கல் தோன்றா காலத்தே அல்ல.. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே என்பதுதான் சரி..

Anonym hat gesagt…

chance statement concentrated fines unearthed ethachem childsuiowa coefficient praveen sharmaprof fyksa
lolikneri havaqatsu

mrknaughty hat gesagt…

நல்ல இருக்கு
thanks
mrknaughty