மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
நன்றி - ஈழமுரசு (23-29-Sep2004)
Dienstag, November 30, 2004
Abonnieren
Kommentare zum Post (Atom)
5 Kommentare:
உங்கள் நம்பிக்கையை கேலி செய்வதாய் இல்லை. ஆனால் இதுபோன்ற கற்பிதங்களை நீங்களும் செய்யவேண்டுமா? ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் 6ஆவது சரி 101வது என்றுதானே சொல்லவேண்டும்? இபோது இருக்கும் பொருளே அந்தப்பழமொழிக்கு போதும் என்பது என் எண்ணம். இதுபோன்ற நவீன பெளாராணிக விளக்கங்கள் மூடத்தனமானவை. இப்படித்தான், இடத்தைக்கொடுத்தா மடத்தைபிடுங்குவான், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் போன்ற நல்ல பழமொழிகளுக்கெல்லாம் இதுபோன்ற ஆன்மீக கற்பிதங்களைக்க்கூறி இப்பவே பாதி சாமியாராய் இருக்கும் தமிழனை முட்டாளாகவும் ஆக்குகிறார்கள் இந்த ஆன்மீக உரையாளர்கள்.
நீங்கள், மகளிருக்காக, குழந்தைவளர்ப்பு பற்றி, மருத்துவம் பற்றி, போராளிகள் பற்றி நிறைய நல்ல விசயங்களை எழுதுகிறீர்கள். அதை தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன். உங்கள் சக்தியும் நேரமும் அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமானவைகளுக்கு பயன்படட்டும்.
நன்றி.
வணக்கம் தங்கமணி
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீண்ட நாட்களாகப் பதில் எழுத நினைத்து நினைத்துத் நாட்கள் தள்ளிப் போய் விட்டன.
இந்தப் பழமொழிகளில் எது சரி எது பிழை என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாது.
நாங்கள் இப்போ எடுத்துக் கொள்ளும் கருத்துக்கள் சரியாகவும் இருக்கலாம். அல்லது பிழையாகவும் இருக்கலாம்.
இதே போல இவைகளுக்கு மற்றவர்கள் கொடுக்கும் கருத்துக்களும் அமையலாம்.
ஆனால் அவைகளையும் நாம் பார்ப்பதிலோ சரி பிழைகளைத் தேடுவதிலோ தவறில்லைத்தானே.
Hi,
This is loga from Colombo. I have read a lot from your articles and I attracted by Child care, Pen Adimai. I have sent those links to my friends. could you send me your msd id. I would like to talk to you. my email logha7@yahoo.com
Thanks And Regards,
Miss.M.Loga.
Kommentar veröffentlichen