Sonntag, April 10, 2005

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்...!

- விவேகன் -
நன்றி - ஈழமுரசு(செப்-ஒக்டோ2004)

16 Kommentare:

Anonym hat gesagt…

//கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்...!//

அதனால தான் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றும் தமிழனை காட்டுமிராண்டி என்றும் பெரியார் சொன்னாரோ?

jeevagv hat gesagt…

நல்ல விளக்கம். இப்படி நான் யோசித்ததில்லையே!

Chandravathanaa hat gesagt…

ஜீவா, இராஜன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

வசந்தன்(Vasanthan) hat gesagt…

அவன் காற்றாக இல்லை. கடவுளாக இருந்தான்.

Chandravathanaa hat gesagt…

வசந்தன்

ஒவ்வொரு மனிதனும் கடவுளானால் எத்தனை கடவுள்கள் எம்முன்...?
அத்தனை கடவுள்கள் இருக்கையில் உலகில் இத்தனை அவலங்கள் ஏன்...?

வசந்தன்(Vasanthan) hat gesagt…

கல் தோன்றி என்று தொடங்கி ஒருத்தன் எழுதினத வச்சு இவ்வளவு கதைக்கிறதப் பாக்க, அதுக்க அதுக்கு முதல் தமிழன் எப்பிடி இருந்தான் எண்டு ஒருத்தர் கேக்க, இப்பிடித்தான் பதில் சொல்லத் தோன்றீச்சு, சொன்னன்.
கடவுளாக இருந்தான் எண்டு தான் சொன்னான். இருக்கிறான் எண்டு சொல்லேல. கடவுள் எண்டா மட்டும் என்ன திறமே? சொல்லப்போனா கடவுள்கள விட மனுசனே மேல் தெரியுமா?

Sri Rangan hat gesagt…

இது ரொம்பத் தேவையற்ற விவாதம்.ஒவ்வொரு இனத்திற்கும் தத்தமது மொழியூடான ஆழ்மனப் புரிதல்களில் பற்பல வேளை மிகுதியான பெருமிதம் உண்டு.அது மொழிவழி வந்ததுவல்ல.ஆளுமைசார்ந்த கோடிடுவதால் வந்தது.இது மனித உடலினது அரசியற்போக்கை ஆழ்மனதில் ஊன்றியதன் வாயிலாகவும்-வரலாறு பூராகவும் தமிழ்பேசும் மனிதர்கள் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டு,அவர்தம் பண்பாடுகள் அழிவுக்குள்ளானபோது-அதை எதிர்த்து அன்றைய தமிழுணர்வுமிக்க ஒருவா அப்படியெழுதியுள்ளார்.இதை ஏன் இப்போ கிண்டல் செய்வான்?இந்த வார்த்தை மாற்றாரைக் காவுகொள்வதற்கான அரசியலை முன்னெடுத்தால் நிச்சியம் எதிர்ப்பது நியாயம்தாம்.ஆனால் அப்படியில்லாதிருக்கும்போது அந்த வார்த்தையின் மானுடநோக்கைத் தேர்வுசெய்யும் அரசியலாக்க முனைவது சற்றும் அறிவார்ந்த நோக்கல்ல.
ப.வி.ஸ்ரீரங்கன்

Chandravathanaa hat gesagt…

கடவுள் எண்டா மட்டும் என்ன திறமே? சொல்லப்போனா கடவுள்கள விட மனுசனே மேல் தெரியுமா?

நன்றி வசந்தன்.

Chandravathanaa hat gesagt…

சிறீறங்கன்
உங்கள் கருத்துக்கு நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Anonym hat gesagt…

கடவுள் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான்.

Anonym hat gesagt…

நூலிடையாள், மீன் விழியாள், கொவ்வை இதழாள், மாம்பழக் கன்னத்தாள் என்று கவிஞர் சொல்வார்கள். இத்தனையும் அப்படியே அமைந்தால் அப் பெண் எப்படி இருப்பாள்? கவிஞர் மிகைப்படக் கூறுவது அந்த அழகைக் கவிதையைப் படிப்பவர் தங்கள் கற்பனையில் இரசிப்பதற்கே. தமிழின் பழமையைக் கூறக் கவிஞர் சொன்னதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கின்றீர்களே. சிந்திக்கச் சில சுவைக்கச் சில. பழமையை இதைவிட அழகாக எப்படிச் சொல்ல முடியும்?

Several tips hat gesagt…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
enpathu thaan sariyanathu.

பகுத்தறிவு hat gesagt…

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த மொழி

கல் தோன்றா காலத்தே அல்ல.. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே என்பதுதான் சரி..

Anonym hat gesagt…

chance statement concentrated fines unearthed ethachem childsuiowa coefficient praveen sharmaprof fyksa
lolikneri havaqatsu

M.Mutharasu hat gesagt…

கல் தோன்றி = மலைகள் தோன்றி
மண் தோன்றா= மண் என்பது விவசாய நிலத்தையும் குறிக்கும்.
அதாவது ஆதியில் மனிதன் மலைக்காடுகளில் பகுதிகளில் வசித்தான் அப்போது நிலம் (விவசாயநிலம்) இருந்திருக்கவில்லை. ஆனால் அப்போதே இரும்பினால் ஆன ஆயுதங்களை சிவபெருமான் கண்டறிந்து பயன்படுத்தினர். பின்னர் மக்கட்தொகை பெருக்கத்தாலும் உணவுப்பற்றாக் குறையாலும் மனிதன் குறிஞ்சி நிலத்தில் இருந்து முல்லை நிலத்திற்கு இடம் பெயர்ந்து பின்னர் மருதநிலத்தை உருவாக்கினர். ஆதியில் எல்லா இடங்களுமே காடுகலால் சூழப்பட்டு இருந்து. எனவே உணவுதானியங்களைப் பயிரிட காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலம் உருவானது. எனவே, விவசாய நில(மண்) உருவாகும் முன்னறே தோன்றிய ஆதிகுடி தமிழன். அவனே பின்பு விவசாய நிலங்களை கண்டறிந்தான்.இதுவே இப்பாடலின் உண்மைப் பொருள்.

Anonym hat gesagt…

உண்மையான