Samstag, August 07, 2004

வாலிப வயதும் பாலியலும் - 1

- இர.அருள் குமரன் -

ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதையைப்பற்றி குறிப்பிட்டார்.

பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம வயதினரின் பாலியல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்கும் விதம்" எனும் பயிற்சிப்பட்டறை குறித்த விளம்பரம் பார்த்தேன். இரண்டு நாட்களில் வெவ்வேறு சமூகக்கூடங்களில் நடைபெற்ற அந்நிகழ்சியின் முதல் நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நான் நேரில் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கீழே தொகுத்திருக்கிறேன்.

முதலில் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான 'குரு பார்வை' எனும் தொடரிலிருந்து பட்டறைக்கு தொடர்புடைய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அந்ததொடரை நான் ஏற்கனவே சிலவாரங்கள் பார்த்திருக்கிறேன், ஆசிரியர் மாணவர் உறவில் எழக்கூடிய சிக்கல்களை வெகு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள்.

கட்டுப்பாடற்ற பதின்ம வயதுப்பெண் இணையத்தில் முகந்தெரியாத நபருடன் அளவளாவி நேரில் சென்று சிக்குதல், இளையர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் போன்ற விஷயங்கள் திரையிலோடின. இதில் நடித்தவர்களும் நேரில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இளையர்கள் சில நிகழ்வுகளை மேடையில் நடித்துக்காட்டினர், இரண்டு மூத்த(அகவை அல்ல!) சமூக சேவகிகள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். அதிக ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்து படைக்கப்பட்ட நிகழ்சியில் வலியுறுத்தப்பட்ட கருத்தின் சாரம் பின்வருமாறு

பெற்றோர்களுக்கான அறிவுரைகள்:
நம் பதின்ம வயதுப்பிள்ளைகளுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல்
  • உங்கள் குழந்தைகள் வாழும் உலகை தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் என்ன அழுத்தம் உணர்கிறார்கள்? எதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்? நாம் அவர்களின் செயல்களிலும், நண்பர்களிடமும் ஆர்வம் காட்டினால், அவர்கள் நம் அக்கறையையும், அவர்கள் வாழ்வில் நம் பங்கையும் உணர்வார்கள்.

  • நல்ல உதாரணங்களை ஏற்படுத்தி, நன்மதிப்பு எவ்வாறு நம் வாழ்வை செழிப்பாக்குகிறது என்று உணர்த்துங்கள்.


  • பிள்ளைகளின் உதவிக்கும் தேவைக்கும் நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துங்கள், நம் யோசனைகளையும் கருத்துக்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

  • அவர்கள் உங்களை கேட்காவிடிலும் நீங்கள் அவர்களை கேள்வி கேளுங்கள், அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பது குறித்து கேளுங்கள்.

  • அறிவுரை சொல்ல வாய்க்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நண்பரின் கர்பம், உலவும் வதந்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை உங்கள் பேச்சை துவங்க உதவலாம்.

  • உங்கள் உணர்வுகளிலும் மதிப்பீடுகளிலும் தெளிவாக இருங்கள். பதின்மவயது பிள்ளைகளிடம் பேசும் முன்பே, என்ன பேசவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். நம் துணை(வர்/வி), நண்பர், அல்லது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் இது குறித்து உரையாடுவது நம் சேதியை தெளிவாக்கிக்கொள்ள உதவும். அது பிள்ளைகளிடம் பேசுவதற்கு தேவைப்படும் நம்பிக்கையையும் வழங்கும்.


கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் பிள்ளைகளின் தன்மதிப்பை வளர்த்துவிடுங்கள். அவர்களின் திறமைகள், குணாதிசயங்கள், சாதனை ஆகியவற்றுக்கு மதிப்புக்கொடுங்கள்.


  • அவர்கள் இயல்பாகவே இருப்பதை மறு உறுதிப்படுத்துங்கள்.


  • நம்முடைய உடலசைவுகள், முகபாவனை, நயம், குரல் ஆகியவை நாம் சொல்லும் சொல்லுக்கு துணை நிற்கட்டும்.


  • தெளிவான, நேர்மையான, சுலபமாக புரியக்கூடிய சிறிய பதில்களை அளியுங்கள்.


  • பகிர்ந்துகொள்ளும்போது காட்சிகளையும் நிறங்களையும் பயன்படுத்துங்கள்.


  • அவர்களின் தவறுகளை கற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துங்கள். குறைகூறுவது, திட்டுவது, புத்திமதி கூறுவது, கத்துவது இவை அவர்கள் கற்க உதவாது.


பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் குறிப்புகள்:

  • கேள்விகளை உள்ளர்த்தம் கற்பிக்காது ஏற்றுக்கொள்ளுங்கள், உதாரணத்துக்கு 'எத்தனை வயதில் பாலியல் உறவுகொள்ளமுடியும்?' என்ற கேள்விக்கு 'நான் உடலுறவு கொள்வது பற்றி சிந்திக்கிறேன், அதற்கு என்ன செய்யவேண்டும்?' என்று அர்த்தமல்ல, பாலியல் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் குடும்பத்தின் மதிப்பை உணரவே முயற்சிக்கின்றன.


  • இது குறித்து பேசுவது சங்கடமாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.


  • பாலுறுப்புகள், பாலியல் ரீதியான செயல்கள் ஆகியவற்றை அவற்றின் சரியான பெயர்களால் குறிப்பிடுங்கள். சங்கடமாக இருந்தால் அப்பெயர்களை உரக்க சொல்லி அல்லது கண்ணாடி முன் சொல்லி பழகுங்கள் (சொந்த எச்சரிக்கை: உரக்கச்சொல்வது என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்குமளவு உரத்து அல்ல, கண்ணாடி முன் சொல்லும்போதும் கேட்கும் தூரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் மறுபாதியிடம் முன்பே செய்யப்போவதை சொல்லி விடுங்கள் இல்லாவிட்டால் அதி தர்மசங்கடமான நிலை ஏற்படலாம்)


  • கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தெரியாது என்றால் ஒப்புக்கொள்ளுங்கள், பின்னர் அவர்களுக்கு விடையை புத்தகத்திலோ வேறு வகையிலோ தேட நாமே உதவலாம்.


  • எல்லா விபரங்களையும் ஒரே நேரத்தில் வழங்கவேண்டியதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.


  • அவர்களின் அந்தரங்கத்தையும் நம்முடையதைப்போலவே மதியுங்கள். தேவைக்கதிகமாக மூக்கை நுழைக்காதீர்கள்


மற்றபடி (அனைவரும் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் தொகுப்பு)

  • இணைய இணைப்பு உள்ள கணினியை தனிமையற்ற, கண்காணிக்க உகந்த கூடம் போன்ற இடங்களில் வைத்துவிடுவது உத்தமம்.


  • உங்களின் ஒழுக்கததைப்பேணுங்கள், நடு இரவில் தந்தை பார்க்கும் நீலப்படம் மூலமாக தூண்டப்பட்ட குழந்தைகள் உண்டு


  • பதின்ம வயதினரிடம் நிறைய சக்தி இருக்கிறது, அவற்றை செலவழிக்க உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளைக்கொடுங்கள் அவர்களை நடனம், விளையாட்டு முதலியவற்றில் ஈடுபடத்தூண்டுங்கள். வேலையில்லாதவன் மூளை சாத்தானின் பட்டறை.


  • பதின்ம வயதினரை அதி நவீன ஆடை அலங்காரப்பிரியர்கள்(இதிலே பல குழுக்கள் உண்டு),அடங்காதவர்கள், படிப்பாளிகள் என்று பிரிவுகளாக பிரிக்கலாம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது, படிப்பாளிகள் கண்டதையும் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது


  • அழகான/களையான எதிர் பாலரைப்பார்க்கும் போது மனதுக்குள்ளாவது ஒரு விமரசனம் வரவேண்டும் அப்போதுதான் இயல்பாக இருப்பதாக அர்த்தம் (இதுவும் அடுத்த மூன்று கருத்துக்களும் மருத்துவ ஆலோசகருடைது)


  • சுய தீண்டல், ஈரக்கனவு போன்றவை இயல்பானது, அதன் அளவை மீறினால்தான் ஆபத்து


  • தன்னுடைய பாலுறுப்பில் அடிக்கடி கையை வைத்திருப்பவர்கள் எல்லோரும் சுயதீண்டல் தான் செய்கிறார்கள் என்று அர்த்தமல்ல, சிலருக்கு அங்கே ஏற்பட்டுள்ள வியாதியும் அதனால் ஏற்படும் அரிப்பும் காரணமாக இருந்திருக்கிறது


  • ஒரு பன்னிரண்டு வயதுப்பெண் கர்ப்பமானது தெரியாமலே ஆனால், ஆறுமாத கர்பத்துடன் சொன்னாள் "டாக்டர் என் வயித்துக்குள்ள ஃபுட்பால் இருக்கு". இப்படியும் இருக்கிறார்கள்


  • இந்த பாலியல் விவகாரமெல்லாம் என் குழந்தைக்கு தேவையில்லை என்று விட்டுவிடாதீர்கள் நீங்கள் சொல்லாததால் அவர்களுக்கு தெரியாமல் போகாது, நீங்களே சொன்னால் தவறான தகவல்கள் அவர்களுக்கு கிடைப்பதை தடுக்கலாம்


  • என்னுடைய நண்பன் விந்து வெளியாவதற்கு முன்பே வெளியே வெளியே எடுத்துவிடுகிறான் அதனால் நான் கர்ப்பமாகமாட்டேன் என்று நினைப்பது தவறு ஏனெனில் நாம் உணராமலே, அடையாளம் இல்லாமலே, முன்னரே விந்து உட்செல்ல வாய்ப்பு இருக்கிறது.


  • முதல் முதலாக உடலுறவு கொள்ளும்போது கர்ப்பமாகாது என்பதும் உண்மையல்ல.


  • கர்பத்தை தவிர்க்க உபயோகிக்கும் ஆணுறை போன்ற சாதனங்கள், மாத்திரைகள் நூறு சதம் பலனளிக்கும் என்று கூறமுடியாது. பல சந்தர்ப்பக்களில் அவற்றின் தோல்வி நிறுபணமாகியுள்ளது.


  • சந்தர்ப்பங்களில் எதிர் பாலர் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆயுதம், "நீ என்னை விரும்புவது உண்மையானால் இதற்கு சம்மதி", "நான் உன்னோடு மட்டுமே உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்", "நாம் அனைவரும் நண்பர்கள் நம்முள் இந்தமாதிரி தேவையற்ற தயக்கங்களும் ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது", இது போன்ற உணர்வுப்பூர்வமான அச்சுறுத்துதல்களுக்கு எப்படி மயங்காமல்/தயங்காமல் பதிலளிப்பது என்று அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.


  • கைகளை வணக்கம் வைப்பது போல உயரத்தூக்குங்கள் அங்கிருந்து மடக்காமல் தொடைவரை கீழிறக்குங்கள், இடைப்பட்ட பகுதி முழுவதும் அந்நியர் தீண்டக்கூடாத பகுதி (பாலுறுப்புகள் மொத்தமும் இதற்குள் அடங்கும்) என்பதை சொல்லி தவறான தீண்டலை அடையாளம் காட்டுங்கள்.


  • குழந்தைகளிடையே பால் அடிப்படியில் வேறுபாடு காட்டாதீர்கள், உதாரணத்துக்கு "அவுரு எல்லாம் நல்லாத்தான் படிக்கிறாரு, இவதான் சரியில்லை" இங்கே 'அவுரு' இளைய மகன், 'இவ' மூத்த மகள்.


  • ஒரு பெண் பருவம் அடையும் போது நாம் அதை விழாவாக கொண்டாடவும் செய்கிறோம், அதே நேரத்தில் அசுத்தம் என்கிறோம். இது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முறையாக அவளிடம் நிகழ்வதை விளக்குங்கள்


  • அவர்கள் பருவம் அடையும் போது ஏற்படும் மாற்றங்கள், வியர்வை/உடல் நாற்றம் போன்றவை அவர்கள் மனதை பாதிக்காமல் பாத்துக்கொள்ளுங்கள், நாற்றம் நீக்கும் வாசனைத்திரவியங்கள் போன்றவற்றை உபயோகிக்க சொல்லிக் கொடுங்கள், எக்காரணம் கொண்டும் அருவருப்பு காட்டாதீர்கள்.

- இர.அருள் குமரன் -

நன்றி - உள்ளத்து ஓசை

Mittwoch, Juli 28, 2004

Sag mir ein gutes Wort

Sag mir ein gutes Wort,
bevor du gehst vom Hause fort,
Es kann so viel am Tag gescheh´n,
wer weiss, ob wir uns weiderseh´n

இன்றைய யேர்மனியத் தினசரிப் பத்திரிகையொன்றில் மரணஅறிவித்தல் பக்கத்தில்
எதிர்பாரத விதமாக இறந்து போன 49 வயதுக் கணவனின் மரணத்தை அறிவித்ததோடு, இதையும் அவர் மனைவி எழுதியுள்ளார்.
இது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு கவிதையாக இருக்கலாம்.
ஆனால் என் மனதைத் தொட்டது.

மரணக் கவலையின்றி...!

இறந்து கொண்டிருக்கிறது
நேற்று உதிர்ந்த மல்லிகை...
இருந்தும்
மணந்து கொண்டிருக்கிறது,
மரணக் கவலையின்றி...!

உயரங்களின் ரசிகன்
ரமேஷ் வைத்யா


nanatri-nesamudan venkatesh

Freitag, Juli 09, 2004

மீண்டும் சுரத்தல்!!!

ஈழநாதன்

தாயே,
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீயேன்
தளர்ந்த மார்படித்து
ஒப்பாரி வைக்கிறாய்?

களுத்துறை
சிறையறையில்
என் உற்றவன்
அதுதான் உன் மகன்,
முன்னொரு திங்கள்
முந்நூறு நாள் சுமந்து
பெற்றெடுத்த
மூத்த மகன்!
காணமற் போனபின்பு
கனகாலம் காத்திருந்து
போய்விட்டான் என்றழுது
திதி செய்த மூத்தமகன்!
சப்பாத்துக் கால்களுக்கும்
சாவுக்கும் தப்பி
உயிரோடு இருப்பதைச்
சொல்லிப்போக வந்தால்...!
என் முகந்தடவி
முடிகோதி,
மார்போடு சேர்த்தணைத்து
ஏனித்தனை
ஆர்ப்பாட்டம்?

உன் மகன் மூச்சை
தினமும் சுவாசித்த
என் மூச்சை
மோப்பதில்தான்
உனக்கு,
எத்தனை விருப்பம்!

ஈராறு வருடங்கள்
கொழும்புக்கும் களுத்துறைக்கும்
பேயாய் அலைந்ததில்
குழிவிழுந்த கண்களில்தான்
மகனையே கண்டது போல்
எத்துணை மகிழ்சி!

சிறை மீண்டு வந்தவன்
மனிதனே அல்லவென்று
கூப்பிய உன் கரங்களுக்கு
யார் சொல்லிக்கொடுத்தார்கள்?

உன் மகன் இன்னும்
உயிரோடிருப்பதை
செவிவழிக் கேட்டு
மனமெலாங் குளிர்ந்து
மீண்டும் சுரக்கிறதா
முலைப்பால்?

ஈழநாதன்
nantri - Thatstamil

Samstag, Juli 03, 2004

Filmlegende Marlon Brando ist tot

Der Hollywood-Schauspieler Marlon Brando ist tot: Brando starb im Alter von 80 Jahren in einem Krankenhaus in Los Angeles, wie mehrere US-Fernsehsender übereinstimmend berichteten. Brando gilt als einer der besten Schauspieler aller Zeiten. Seine Arbeit brachte ihm unter anderem zwei Oscars als bester Hauptdarsteller ein. Die italienische Schauspielerin Sophia Loren sagte: "Schauspieler wie er müssten unsterblich sein".

Brando drehte im Laufe seiner Karriere dutzende Filme, von denen einige zu Klassikern wurden. Der Durchbruch gelang ihm mit "Endstation Sehnsucht" (1951), es folgten "Julius Caesar", "Die Faust im Nacken", "Meuterei auf der Bounty", "Der Pate", "Der Letzte Tango in Paris". Für seine Rollen in "Die Faust im Nacken" und "Der Pate" bekam Brando den Oscar als bester Hauptdarsteller verliehen.

Später zog sich der Schauspieler zunehmend zurück und war nur noch selten auf der Leinwand und vorwiegend in Nebenrollen zu sehen, wie zum Beispiel in "Apocalypse Now" und "Don Juan De Marco". Deutsche Kinogänger konnten ihn zuletzt 2001 in dem Thriller "The Score" erleben.

Nicht nur Brandos Filmrollen waren exzessiv, auch sein Leben war ein einziges Auf und Ab. Der Filmstar hatte drei Ehefrauen, zahlreiche Geliebte und mindestens elf Kinder. 1990 wurde sein Sohn Christian zu zehn Jahren Haft verurteilt, weil er den Verlobten seiner Halbschwester Cheyenne umgebracht hatte.

Die größte Tragödie musste Brando 1995 verkraften, als sich Cheyenne das Leben nahm. In den vergangenen Jahren lebte der stark übergewichtige Brando zurückgezogen in Los Angeles. Trotz seiner großen Erfolge soll er laut Medienberichten zuletzt gebrochen und verschuldet gewesen sein.

Seine einstige Filmpartnerin Sophia Loren sagte laut italienischer Nachrichtenagentur Ansa, Brando sei ein "wunderbarer" Kollege und ein "großer Könner" gewesen. Zudem sei er ihr "ein sehr teurer Freund" gewesen. In seinem Leben habe es wahre Tragödien gegeben, "und vielleicht hat er sich deshalb gehen lassen".

Quelle Yahoo

Mittwoch, Juni 30, 2004

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்


பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன.

மணிக்கணக்கில் சம்மணம் இட்டு உட்காருவதுகூட எனக்கு ஒரு சவால்தான் - பேட்ரிக் இன்கோபோ

கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன.

ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை நிரூபித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் 'ஸுலு' பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 34 வயது கறுப்புக் குயில்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஜேசுதாசின் பாடல் ஒன்றை கேட்டு மயங்கிய பேட்ரிக், கிறங்கவைக்கும் அந்த இசையை தானும் கற்கவேண்டும் என்று உறுதிபூண்டார்
அதிர்ஷ்டக் காற்று தன் பக்கம் அடிக்க, தென்னாப்பிரிக்காவுக்கு கச்சேரிக்காக வந்த ஜேசுதாசிடம் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி, சென்னை வந்தால் தன்னிடம் இசை பயிலலாம் என்று ஒப்புதலை பெற்றார்.

வறுமையால் வாடிய நிலையிலும், போராடிப் பணம் சேர்த்து சென்னையில் வந்திறங்கிய பேட்ரிக், குருகுலவாசம் போல ஜேசுதாசின் வீட்டிலேயே தங்கி பயிற்சி செய்து தனது இசையார்வத்திற்கு தீனி போட்டு வந்தார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவிலும் மூன்று ஆண்டுகள் சென்னையில் கர்நாடக இசையை பயின்று தேறினார் பேட்ரிக்.

கர்நாடக இசையை கற்றுப் பாடுவதற்கு வருடக் கணக்கில் கடும் உழைப்பும். பொறுமையும் தேவை. வெளிநாட்டவரான பேட்ரிக்குக்கு மொழியும் ஒரு தடை. ஆனால் அத்தடைகள் எல்லாவற்றையும் தாண்டி அவரால் சரியான உச்சரிப்புடன் ஏழு இந்திய மொழிகளில் பாட முடிகிறது.
பேட்ரிக் தமிழ் ஆல்பம்

இது தவிர தானாகவே 'ஸுலு' மொழியில் பாட்டெழுதி இந்திய ராகங்களில் மெட்டமைத்து பாடி தென்னாப்பிரிக்க ரசிகர்களையும் கவரக்கூடியவர் இவர்.

பேட்ரிக் பற்றி தமிழோசைக்கு கருத்து சொல்லிய பாடகர் ஜேசுதாஸ், அவரை மிகச் சிறந்த மாணவனாக மெச்சினார். எவ்வளவு தடையிருந்தாலும் விடாமுயற்சி ஒரு மனிதனை எங்கு இட்டுச் செல்லும் என்பதற்கு பேட்ரிக் ஒரு உதாரணம்

ஜேசுதாஸ்

எவ்வளவு தடையிருந்தாலும் விடாமுயற்சி ஒரு மனிதனை எங்கு இட்டுச் செல்லும் என்பதற்கு பேட்ரிக் ஒரு உதாரணம் - ஜேசுதாஸ்

கர்நாடக இசையின் பெருமையை உலகறியச் செய்வதே தனது கனவு என்று கூறுகிறார் பேட்ரிக் என்கோபோ.

Quelle - BBC TAMIL.com

Freitag, Juni 11, 2004

சாதனைச் செல்வி: மாளவிகா!

கு. செல்வராசு


படம் : சிவராமன்

ஒருவரின் வாழ்வில் நிகழும் அசாதாரண சம்பவங்கள் அவரின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகின்றன.அப்படித்தான், கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத அந்தத் துயரநிகழ்வு அச் சிறுமியின்வாழ்விலும் நடந்தது.எதிர்பாராமல் நடந்தவெடிவிபத்தில்கைகளையும், கால்களையும் இழந்துவிட்ட சிறுமிமாளவிகாவின் (15) எதிர்காலம் கேள்விக்குறியாய்ப்போனதாகத்தான் பலரும் கருதினர்.

ஆனால், சாதிக்க வேண்டும் என்ற வெறியும், நம்பிக்கையும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும் இருந்தால், எந்த வெற்றியும் மிகச்சாதாரணமானதே என்று உலகத்துக்கு நிரூபித்திருக்கிறார் மாளவிகா. பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தமிழகத்தில் முதலிடத்துடன் 483 மதிப்பெண் பெற்று சாதனைச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் அவர் வாழ்வின்" பிளாஷ் பேக்':

அது, 2002-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி. வெள்ளிக்கிழமை. தேசத்தை அதிர்ச்சியடையச் செய்த அச் சம்பவம் நடந்தது.

டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவிலிருந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை நோக்கி இந்திய ராணுவத்தின் 250 ராணுவ லாரிகள், வாகனங்கள் ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.

அப்போது, எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள பிகானீரின் உதாசர் என்ற ராணுவப் பகுதி அருகே ஒரு ராணுவ லாரியில் தீப்பிடித்தது.

காதைப் பிளக்கும் சப்தத்துடன் லாரியில் இருந்த ராக்கெட் குண்டுகள் வெடித்து நாலாபுறமும் சிதறின. எங்கும் புகைமயம். மற்ற லாரிகளுக்கும் தீ பரவியது. 70 லாரிகள் சம்பலாயின.

அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் அதிர்ந்தன. குண்டுகள் பறந்து வந்து விழுந்தன. அப்படித்தான், டம்ளர் சைஸில் உருளை வடிவில் உள்ளீடற்ற ஒரு பொருள் சிறுமி மாளவிகாவின் வீட்டிலும் வந்து விழுந்தது. உள்பக்கம் வெற்றிடமாகவும், மேல் பகுதியில் மட்டும் லேசாக மூடப்பட்டிருந்தது. பார்க்க அழகாக இருக்கிறதே என்று அதை எடுத்து "ஷோகேஸில்' வைத்தார்.


Photo: R. Ragu

2002, மே மாதம் 26-ம் தேதி. பகல் சுமார் 1 மணி. தரையில் உட்கார்ந்து கொண்டு, தனது கிழிந்துபோன ஜீன்ûஸ "பெவிக்கால்' போட்டு ஒட்டிக் கொண்டிருந்தார் மாளவிகா. ஒட்டிய பகுதியை எதையாவது வைத்தத் தட்ட நினைத்தவரின் கண்களில் அந்தப் பொருள் படுகிறது.

எடுத்துத் தட்டினார். அவ்வளவுதான். எதிர்பாராத அச் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அப் பொருள் வெடித்துச் சிதறிது. சுற்றுப் பகுதி முழுவதும் மிகப் பெரிய சப்தம். பகல் 1.10 என்று காட்டிய கடிகாரம் அப்படியே நின்றுபோனது.

அந்தப் பொருளைப் பிடித்திருந்த மாளவிகாவின் கைகள் முழங்கைக்குக் கீழே அந்த இடத்திலேயே சிதைந்து காணாமல் போயின. முழங்காலுக்குக் கீழ் பகுதியில் இரண்டு கால்களின் எலும்புகளும் நொறுங்கிப் போனது.

""பிகானீர் மருத்துவமனையில் ஒரு நாள். ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் 3 மாதத் தீவிரச் சிகிச்சை. பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்த கால்பகுதியின் சதைகளை ஒட்ட வைத்தனர். எலும்பு வளர்ந்து ஒட்டிக் கொள்ளும் என்று முதலில் டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு, அதற்குச் சாத்தியமில்லை; தில்லிக்குத்தான் செல்ல வேண்டும் என்று கைவிட்டுவிட்டனர். அதற்குப் பின், சென்னைக்கு அழைத்து வந்தேன்.'' -பட்ட கஷ்டங்களை நினைவு கூர்கிறார் தாய் ஹேமா.

தந்தை கிருஷ்ணன், ராஜஸ்தான் மாநில குடிநீர் வாரியத்தில் செயல் பொறியாளர். இவர்களது பூர்விகம் கும்பகோணம்.

சென்னை வந்ததும், ஷெனாய் நகரில் உள்ள ஹேமாவின் சகோதரிகள் வீட்டில் தங்கி மாளவிகாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அண்ணா நகரில் உள்ள "போன் அண்ட் ஜாயின்' கிளினிக்கில் டாக்டர்கள் சிவமுருகன், சதீஷ் ஆகியோரின் முயற்சியால் கால் எலும்புகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

வலது காலில் பிளேட் வைக்கப்பட்டது. இடது காலில் உடைபட்ட எலும்புப் பகுதியில் ஸ்குரூ போடப்பட்டது. ஜூலை 18-ம் தேதி மாளவிகாவுக்குப் பிறந்த நாள். இழந்த கைகளுக்குப் பதிலாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட "ஓட்டோ வாக்' என்ற செயற்கைக் கைகளை தந்தை வாங்கித் தந்தார். ஒரு கையின் விலை ரூ.2.5 லட்சம். உடல் அசைவுகளுக்கு ஏற்ப அதில் உள்ள விரல்களை ஓரளவுக்கு இயக்கக் கூடியது இது.

கால் எழும்புகள் ஒட்ட வைக்கப்பட்டு, செயற்கைக் கைகள் கிடைத்த பின்புதான், புதிய வாழ்க்கைப் பயணத்தை நம்பிக்கையோடு தொடங்கினார் மாளவிகா.

2003, அக்டோபர் மாதம் மெல்ல நடக்க ஆரம்பித்தார். அவரது வகுப்புத் தோழிகள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். பாதியில் விட்ட படிப்பைத் தொடர வேண்டும்; தோழிகள் 10-ம் வகுப்பு முடிக்கும் போது தானும் முடிக்க வேண்டும் என்ற வெறி மாளவிகாவுக்கு.

10-ம் வகுப்புத் தனித் தேர்வுக்கு, ஷெனாய் நகரில் உள்ள அருள் கோச்சிங் சென்டரில் அக்டோபரில் சேர்ந்தார். காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரப் பயிற்சி. அவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் அமரக்கூட முடியும்.

""தினமும் 3 மணி நேரம் படிக்க ஆரம்பித்தேன். தேர்வு நாள்களில் அதிகாலை 2 மணிவரைகூடப் படிப்பேன். வீட்டில் சத்தம்போட்டு கத்திக் கத்திப் படிப்பேன்'' என்கிறார் மாளவிகா.

செயற்கை விரல்கள் மூலம் தேர்வு எழுத முடியாது என்பதால், மாளவிகா பதிலைச் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எழுதினர். அப்படி எழுதி இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்.

அறிவியல், கணிதம் ஆகிய இரண்டிலும் 100 மதிப்பெண்கள். இந்தியில் 97. இந்த மூன்றிலும் தமிழகத்தில் முதலிடம். சமூக அறிவியல் - 97. ஆங்கிலம் - 89. மொத்த மதிப்பெண்கள் - 483.

அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் பள்ளியில் படித்த இவரது சகோதரி காதம்பரி, இந்த ஆண்டு பிளஸ் டூ-வில் 1200-க்கு 1162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

""எந்தச் சூழ்நிலையிலும் மனத் தளர்ச்சி அடையக்கூடாது. முடியும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி உறுதி.'' என்கிறார்.

ஆங்கிலம், தமிழ், இந்தி மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசுகிறார்.

""விபத்து நடப்பதற்கு முன்பு நீச்சல், ஸ்கேட்டிங், நடனம் ஆகியவை செய்து கொண்டிருந்தேன். திரும்பவும் நடனமாட வேண்டும். கார் ஓட்ட வேண்டும்.'' என்பது இவரது ஆசை.

எதிர்கால லட்சியம்?

""ஐஏஎஸ்'' - உறுதியாகச் சொல்கிறார்.

""ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால், அது முடியாது. எனவே, ஐஏஎஸ்-ஆகி மக்களுக்கு முடிந்த அளவுக்குச் சேவை செய்ய வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.'' என்கிறார் இந்த சாதனைச் சிகரம்.

தமிழகத்திலிருந்து இன்னொரு ஐஏஎஸ்?. வெல்லட்டும்.

nantri-Thinamani

The story of a Little Red Dot

Shoma A Chatterji

Mitra Sen, a young Canada-based Indian filmmaker, is credited with converting an Indian custom into a movement against racism in Canadian schools. The feat has been recorded in a film - Just A Little Red Dot - made by Sen herself.

"It all started when a group of children, who faced racism in their school in Scarborough, went out on a mission to help everyone understand the importance of respecting people for what they are. This initiative was the inspiration for my film,'' says Sen.

Sen, a teacher in that school, not only watched the movement grow from close quarters, she also played a vital role in sparking it off.

When Parvathi, a newcomer from Sri Lanka, stepped into grade five, wearing a little red dot on her forehead, there was a sharp reaction in her class. Some of her classmates were curious, others plain hostile.

Then something happened that took the bindi out of Pravathi's class, beyond the school campus, and turned it into a national controversy.

Parvathi presented Sen with a packet of bindis as a birthday gift. Sen began wearing them to the school and soon her students began emulating her.

However, there was a section of students which did not like this. They would jeer and make racist remarks at students wearing bindis. The conflict did not take long to spill over to town streets and some parents began criticising school authorities for allowing such flagrant defiance of dress code.

What for the children was just a bit of fun, awakened serious misgivings in the minds of the adults. Would their children reject their upbringing? Was the East taking over the West?

The bindi lovers in Sen's school were, however, unperturbed. They began educating their friends about the importance of imbibing alien cultures. They would spend the recess time to communicate with those opposed to their love of the bindi.

Soon they formed the 'The Little Red Dot Club' and the movement rapidly spread to neighbouring towns and cities.

The genesis and the growth of 'The Little Red Dot Club' forms the narrative of Sen's film.

Born in Calcutta, brought up in the UK and now based in Canada, Sen says that when her student presented her with the packet of bindis she thought it was a lovely gesture. "But I did not foresee the undercurrents of hostility that would follow. But looking back I realise that the hostile reaction was more out of ignorance than any racist feelings."

The narrative of Just A Little Red Dot is simple and linear. There are no gimmicks, no pontification and the characters seem to be unaware of the presence of the camera.

Directing children is a challenging task, but Sen has done a great job. "I auditioned more than 400 children...drawing up the final list was not an easy task, " recalls Sen.

But it was all worth it. Just A Little Red Dot has won many international awards.

'The Little Red Dot Club', meanwhile has grown into a national movement. It even has a mission statement now.

"Our goal is to make our generation realise the importance of sharing and understanding the different cultures of the world, so that when we grow up we will know how to cooperate with all people no matter what they look like or where they come from. That is our mission and we are taking steps to make it come true."

The film opens with the little Sri Lankan girl and her neighbour. Sen cleverly juxtaposes cultural differences through deft close-ups and collages. In the 36-minute film, Sen manages to flesh out each character, define tensions and hostilities, and create just the right ambience of a Canadian school.

Sen was in India twice last year. Her film was screened on both occasions. The first time she came to scout locations in Varanasi and Jaisalmer for her new film. The film was screened finally at the Max Mueller Bhavan in Calcutta. She then came in November when her film was screened as part of a special programme on young NRI filmmakers at the Calcutta International Film Festival.

"I am happy that my film has been received well by children and adults alike who have complimented me on the project. Many of them come and tell me at parent-teacher meetings that they learnt a lot from their children's club. I value this much more than all the awards my film has won," she says.

AWARDS WON BY THE FILM

Most Popular Film
14th Chicago International Children's Film Festival

Gold World Medal
New York Festivals Best Multicultural Film

Best Short Film
10th International Film Festival for Children, India

Best Live Action
Short Korean International Family Film Festival

First Place
45th Columbus International Film Festival-Humanities

Grand Trophy
New York Festivals - Best Educational Film

First Place
Short Film Cineduc, Cinema e Educaco, Brazil

Golden Book Prize
26th Roshid Educational Film Festival, Iran.

Quelle - http://www.rediff.com/us/2000/may/08us.htm

Montag, Mai 31, 2004

என் எழுத்து: சில எண்ணங்கள்

வெங்கடேஷின் மடல் இதழ் 8 இலிருந்து

I.
உங்களை பயமுறுத்துவது என் நோக்கமல்ல. ஆனால், உள்ளபடி, நான் அநுபவிக்கும், அநுபவித்த அவஸ்தைகளைப் பகிர்ந்துகொள்வவே இதை எழுதுகிறேன்.

பல நாள் கதை எழுதவே முடிந்ததில்லை. தினசரி காலையில் கணினி முன் ஒற்றைக்கால் தவம் மாதிரி உட்கார்ந்துகொண்டே இருப்பேன். அஞ்சல்களைப் பார்ப்பேன். மற்றவர்கள் எழுதுவதைப் படிப்பேன். பதில் போடத் தோன்றினால் பதில். அப்புறம், அவசரமாய் எழுதவேண்டிய கட்டுரைகள் ஞாபகம் வரும். கொஞ்சம் இணையத்தில் மேய்ந்து, அடிப்படைச் சரக்குகளை சேகரித்துக்கொண்டு, கட்டுரை எழுதுதல்.

முன்னரே எழுதத் தொடங்கி 2 கேபி, 3 கேபி, 5 கேபி, 6 கேபி ரேஞ்சுகளில் பல கதைகள் எனது 'முடிக்கவேண்டும்' என்ற கோப்பில் காத்திருக்கும். ஒவ்வொன்றாய் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்ப்பேன். எழுதத் தொடங்கிய போது இருந்த மனநிலை இப்போது படிக்கும்போது இருக்காது. சுவாரசியம் கூடாது. அப்படியே அப்படியே மூடி வைத்துவிடுவேன். பல சமயங்களில் இந்தப் பழைய கதைகளைப் படிப்பதைவிட, புதிதாக எழுதலாம் என்று தோன்றிவிடும். அப்படியே ரம்பிக்கவும் செய்வேன். எண்ணி 30வது வரியில் ஒரு அசுவாரசியம் ஏற்பட்டுவிடும். நிறுத்தி வைத்துவிட்டு, யோசிக்கத் தொடங்கிவிடுவேன்.

கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன். காலாற நடந்து போகும் எல்லா சமயங்களிலும் ஏதேனும் ஒரு கதை என்னுள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. இந்த யோசனையை அப்படியே எழுத்தில் வடித்து தரும் இயந்திரம் ஏதேனும் இருக்குமானால் எவ்வளவு செளகரியம் என்று நினைத்துக்கொள்வேன்.

90களில் எனக்குப் பெரும் மனஎழுச்சி இருந்ததுண்டு. மூன்று மணிநேரத்தில் ஒரு சிறுகதை எழுதிவிடும் லாவகம் கைகூடியிருந்தது. எனது பெருங்கூட்டத்தில் ஒருவன், கரைந்தவர்கள் தொகுதியில் உள்ள பல கதைகள் இப்படி எழுதப்பட்டனதாம். மனஎழுச்சி அடங்குவதற்குள் சிறுகதை எழுதி முடிக்கப்பட்டிருக்கும். சுத்தமாக. ஒன்றிரண்டு அடித்தல் திருத்தல்களுடன். பெரும்பாலும் இரண்டாம் படி எழுதுவதில்லை. முதல் படியையே பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறேன். ஒரு போட்டோ காப்பி மட்டும் எடுத்து வைத்துக்கொள்வேன்.

கதை எங்கிருந்து தொடங்கும் என்று என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ஏதோ ஒரு சம்பவமோ, கருத்தோ, எண்ணமோ கதையை எழுதத் தொடங்கும். கணினியில் எழுத உட்காரும் போது, முதல் வரி எப்படி வந்துவிழும் என்று இதுவரை தெரியாது. எழுத எழுதத்தான் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுதல், அவர்களின் குணாதிசயங்களை வரையறுத்தல், வாழும் சூழலை நிர்ணயித்தல் போன்றவை நடைபெறும். எழுதும் முன், ஒருமாதிரி இப்படியாகக் கதை எழுத வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அதற்கான முடிவையும் யோசித்து வைத்திருப்பேன்.

எழுதத் தொடங்கியபின், முடிவு என் கையில் இல்லை. யோசிக்கும் வேகத்தில் தட்டச்சு செய்ய முடியுமென்பதால், யோசனை நினைத்தறியா திசைகளில் பாயத் தொடங்கும். யோசித்தே இராத பல சூட்சுமங்கள் கதையில் தானே வந்து சிக்கிக்கொள்ளும். வளர்ந்துகொள்ளும். சம்பவங்களும் உரையாடலும் கூட தானே பொருத்தமான இடங்களில் அமைந்துகொள்ளும். உரையாடலைத் தவிர்த்தே நான் எழுத முயற்சிப்பேன்.

பல சமயங்களில் உரையாடல், கதையின் அழுத்தத்தைக் குறைத்துவிடுமோ என்ற தயக்கம் எனக்கு உண்டு. உரையாடலை மிக வலுவாகப் பயன்படுத்துபவர் என்ற நான் நம்புவது இந்திரா பார்த்தசாரதியைத்தான். பலர் உரையாடலில் சறுக்கிவிடுவார்கள். கதை அங்கே தேங்கிவிடும். அல்லது நீட்டி முழுக்கி, எந்தப் பயனும் இல்லாமல் தொணதொணக்கும். இதைத் தவிர்க்க நான் ரம்பத்தில் இருந்து கவனமாக ஒரு உத்தியைப் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் தேவைப்படும் தருணத்தில் என் பாத்திரங்கள் சட்டென இரண்டு மூன்று வரிகள் பேசுவார்கள். முடிக்க மாட்டார்கள். உரையாடலைத் தொடர்ந்து வரும் பகுதி அதை முடித்து மேற்கொண்டு செல்லும்.

ஒரு வகையில் அழுத்தத்தைத் தொடர்வதற்கு இது நல்ல உபாயம்.

கதையில் உணர்வுதான் எனக்குப் பிரதானம். உணர்வு பெரும்பாலும் ஒரு ஊடாட்டத்தின் ஊடேதான் இருக்கும். ஒன்றைச் செய்யலாமா வேண்டாமா என்பது எவ்வளவு பெரிய குழப்பம் என்பது யோசித்துப் பார்த்தால் தெரியும். என் கதைகள் முழுவதும், இந்த ஊடாட்டமும், கேள்விகளும்தான் பின்னிப் பிணைந்து வரும். கீழ் மத்திய தர வாழ்வில் இந்தக் குழப்பத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தக் குழப்பத்தையே வரிகளில் நீட்டித்துக்கொண்டு போகலாம். அழுத்தம் கூடும்.

மற்றொன்று மெளனம். இதில் எனக்கு வாத்தியார் அசோகமித்திரன். ஒரு உதாரணம். ஒரு பாத்திரம் அநுபவிக்கும் துயரத்தை இரண்டு மூன்று விதங்களில் பிரதிபலிக்கலாம். பாத்திரத்தின் மனநிலைக்குள் போய், பிசையும் வேதனையை வார்த்தைகளில் வடிக்கலாம். இப்படியாக வேதனைப்பட்டான், துயரப்பட்டான் என்று வருணித்துக்கொண்டே போகலாம் (இதைத்தான் நமது புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்கள் செய்கிறார்கள்). மூன்றாவது, வேதனைப்படுபவனைச் சுற்றியுள்ள உலகை, அவனது நடவடிக்கைகளை, போக்குகளை வெளியில் இருந்து பார்ப்பது. அவன் மனத்துக்குள் போகாமல், அவனது ரியாக்ஷன்களை மட்டும் பதிவு செய்வது. மற்ற பாணிகளை விட, இதுதான் பயங்கர அழுத்தம் தரக்கூடிய பதிவு. சிந்தாமல் சிதறாமல், அந்த வேதனை என்ற உணர்வு வாசகனைப் போய்ச் சேர, இந்தப் பாணிதான் வெற்றிகரமான பாணி. படித்து
முடிக்கும்போது, மனத்தில் திம்மென ஒரு கனம் இருக்கும். வெற்றிகரமாக உணர்வை வாசகன் மனத்தில் கடத்திவிட்டோம் என்று இதற்கு அர்த்தம்.

பல முக்கியக் கதைகள் இப்படிப்பட்டனதாம். சுந்தர ராமசாமியின் விகாசம், வண்ணதாசனின் குமரேசன் என்பவரும்.., வண்ணநிலவனின் தாமிரபரணிக் கதைகள் தொகுதியில் உள்ள பல கதைகள், கந்தர்வனின் கொம்பன்....

இதையெல்லாம் யோசித்து கான்ஷியஸ்ஸாகச் செய்ய முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. அல்லது என்னால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. இப்படியெல்லாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேனே தவிர, எழுதும்போது, என்ன வருகிறதோ அதை அப்படியே வைத்துக்கொள்ளவே விரும்புவேன். மேன்மேலும் செதுக்குகிறேன் பேர்வழி என்று என் மேதாவிலாசத்தை அதில் போட்டுத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எழுதத் தொடங்கிய 80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் ஒரே கதையை பல படிகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். மேன்மேலும் அதைச் செப்பம் செய்து செய்து மாற்றியிருக்கிறேன். அப்புறம், ஒரு கட்டத்தில் அது தேவையில்லாமல் போய்விட்டது.

II.
இந்தக் கணினி / இணைய நிறுவனமான சி·பிக்கு வந்தபின், எழுதும் பரபரப்பு என்பது முற்றிலும் நீங்கிவிட்டது. என் மனநிலைக்கு ஏற்ப கதைகளை எந்த அழுத்தமோ அவசரமோ இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒருவிதமான மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது. கதை யாருக்காக என்பதில் எனக்கு ஏற்பட்ட மனமாற்றம்தான் இது.

கதை அடுத்தவருக்காகத்தான். அதில் சந்தேகமில்லை. னால், முதலில் அதை நான் ரசிக்க வேண்டும், எழுதுவதை அநுபவிக்க வேண்டும் என்ற பக்குவம் கடந்த சில ண்டுகளாக ஏற்பட்டுவிட்டது. அதனால் கதை எழுதுவதில் மந்தத்தனம் வந்துவிட்டதும் உண்மை. மற்றொரு முக்கிய மாற்றம் பத்திரிகைகள்,பிரசுரம், வெளியீடு தொடர்பாக இருந்த சைகளில் ஏற்பட்ட மாற்றம். முன்பெல்லாம், எனக்கு தர்சம் னந்த விகடன்தான் (இன்றும் சையில்லை என்று சொல்லமாட்டேன்). கல்கியில் நிறைய கதை எழுதினேன். குமுதத்தில் எழுதுவதில் தயக்கம் இருந்ததுண்டு.

ஆனால், விகடன் என்று கனவு. அதில் கதை வரவேண்டும் என்று ரொம்பவும் சை. அங்கே, ரமேஷ் வைத்யா என்றொரு நண்பர் உண்டு. அவரிடம்தான் என் கதைகளைக் கொடுப்பேன். படித்துவிட்டு, நன்றாக இருக்கிறது, னால், எடிட்டோரியல் தான் தீர்மானிக்கணும் என்பார். மூன்று நான்கு மாதத்துக்குள் கதை வெளியாகும். னந்த விகடனுக்குக் கொடுத்த எந்தக் கதையும் திரும்பி வந்ததில்லை. எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனக்குள் வேறு ஒரு போராட்டம் இருந்துண்டு. அதில் இருந்து விலக விலக நான் நிறைய தெளிந்திருக்கிறேன்.

1. பத்திரிகைக்கேற்ப கதையிருந்தால் தான் பிரசுரிப்பார்கள். இதன் கராலரி,
பிரசுரிப்பதற்கேற்ப கதை எழுதுவது. சிறுபத்திரிகை உலகில் இருந்து வந்த எனக்கு இது இரண்டும் மனத்தில் ஒப்பவில்லை. விகடன், நான் எழுதிய கதைகளை அப்படியே பிரசுரித்தது. ஒரு வார்த்தை கூட மாற்றியதில்லை. இப்போது வேறு மாதிரி சொன்னார்கள், 'கரெக்டா, அவங்களுக்கு ·பிட் கிறா மாதிரி கதை எழுதறீங்க. அதான், அப்படியே போடறாங்க.' பிரச்சினை எங்கே என்று யோசிக்கத் தொடங்கினேன்.

சிறுபத்திரிகை - வெகுஜன பத்திரிகை என்ற பிரிவினை தந்த குழப்பம் இது. வெகுஜன பத்திரிகை எது செய்தாலும் ஏற்கக்கூடாது. அதன் வணிகம், நோக்கம் நல்லிலக்கியத்துக்கு நேர்மாறானது என்று விளக்கம் கூறினார்கள்.

இப்போது நான் எங்கே நிற்கிறேன் என்று யோசித்தேன். என்னைப் பொறுத்தவரை வணிகம் என்றும் தவிர்க்கமுடியாதது. வணிக வெற்றியில்லாமல், எந்த நல்ல விஷயமும் சாத்தியமில்லை. முன்னேற்றமும் சாத்தியமில்லை. வணிக நிறுவனத்துக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரியாதை உண்டு. இடம் உண்டு. விகடன் என்ற பத்திரிகை என் எழுத்தில் தலையிடவில்லை. சொல்லப்போனால், மரியாதையே செய்திருக்கிறது.

2. அடுத்து என்னை நிறுத்திய கேள்வி: நான் எந்த வழியில் வருகிறேன்? நிச்சயம் நான் சிறுபத்திரிகையாளன் இல்லை. அதன் சத்தான பகுதிகள் என்னுள் உண்டு. னால், அதன் மெளடீகங்களுக்கு என்னால் உடன்பட முடியாது. அதே போல், நிச்சயம் நான் வணிக எழுத்தாளனும் இல்லை. என்னால் ஒரு தேவிபாலாவாகவோ, ரமணி சந்திரனாகவோ க முடியாது. கவும் விரும்பவில்லை. இடையே ஒரு வளமான பரம்பரை உண்டு. வணிக இதழ்களில், சமரசம் செய்துகொள்ளாத தமது எழுத்துக்களால் இன்றும் நிலைத்து நிற்கும் தி.ஜா, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, தவன், சுப்பிரமணிய ராஜூ, மாலன் பரம்பரையில் வருபவன் நான்.

நான் எங்கே நிற்கிறேன் என்ற குழப்பம் இப்படித்தான் தீர்ந்தது.

3. எங்கே எழுதினாலும் நான் எப்படி எழுதுகிறேனோ அப்படியேதான் எழுதுகிறேனா? அன்று யோசித்த போதும் சரி, இன்று திரும்பிப் பார்க்கும்போதும், நான் மாறவேயில்லை. நான் எழுதவிரும்பியதை எழுத விரும்பிய வகையில், முறையில் எழுதி வந்திருக்கிறேன். சற்றும் யாருடைய, எதனுடைய அழுத்ததுக்கும் ட்படவில்லை.

இதுபோதும். இதுதான் என் பெரிய பலம். உண்மையில் சொல்கிறேன், நான் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தது இந்தத் தெளிவு வந்தபின்புதான். ஒப்பியல் நோக்கில், என் தரம் என் சமகாலத்தில் எழுதும் மற்றொருவரோடு வேறுபடவே செய்யும். படிக்கும் ஒவ்வொருவரின் பார்வை சார்ந்து தரம் தரமின்மை
மாறுபடும். அதற்காக நான் கவலைப்பட முடியாது.

இந்த தைரியம் வந்தபின்பு, பிரசுர சை பெருமளவு குறைந்துவிட்டது. விருப்பப்பட்டபடி, எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் பிரதிநிதித்துவப் படுத்தும் கீழ் மத்தியதர சமூகத்தை, எனக்குத் தெரிந் வரையில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறேன். பலருக்குப் பிடித்திருக்கிறது. வேறு பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். நேராக முகத்திற்கு நேரே சொல்லாமல் இருக்கிறார்கள்.

பிடிக்காதவர்கள் குறைசொல்லும்போது ஏற்படும் அதே மனநிலையில்தான், பிடித்தவர்கள் பாராட்டும்போதும் இருக்கிறது. பெரிய வித்தியாசமில்லை.

நேசமுடன்
வெங்கடேஷ்

Dienstag, Mai 18, 2004

ஓடுகிற வண்டியோட... - மீளும் நினைவுகள்

ஈழநாதனின் பதிவிலிருந்து.


கொழும்பு போகும் சனம் ஒல்லித்தேங்காயுடன் பயணம் போனது என்று சொன்னேன்.ஒல்லித்தேங்காய் எதற்கு என்று சொல்லவில்லை.தேங்காயில் இடையிலேயே பழுதடைந்த தேங்காய்கள் அவற்றை மூடியுள்ள தும்புடன் நீரில் போட்டால் நன்கு மிதக்கக் கூடியவை.இப்படியான இரண்டு தேங்காய்களை கயிற்றால் பிணைத்து அவற்றை இடுப்பிலை கட்டி நீந்தப்பழகுறதுக்கு பயன்படுத்துவினம்.ஆமி வந்தவுடனை கடலுக்கை குதிச்சு நீந்தாட்டிலும் மிதக்கிறதுக்காவது பயன்படுமே என்று தான் இவற்றையும் கொண்டு போனவை.

தொடர்ந்த இழப்புகளாலை சனம் கிளாலிப் பாதையென்றாலே ஏதோ யமலோகம் போறமாதிரிப் பயப்படத் தொடங்கீட்டுது.கொழும்பு போற ஆக்களை வழியனுப்ப வாறவை.போறவையை ஏதோ பலிக்களத்துக்குப் போற ஆடுகள் மாதிரிப் பார்த்திச்சினம்.

கிளாலி Mapஇதாலை விடுதலைப்புலிகளுக்கும் பெரும் பிரச்சனையாகப் போச்சுது உவ்வளவு வீரம் காட்டிறியள் உதிலை வாற நேவிக்கு அடிக்கக் காணேலை என்று சனம் நேரடியாகக் கேட்கத் தொடங்கீட்டுது.இந்தப்பிரச்சனையை பாராளுமன்றத்திலை கொண்டு போச்சினம் இரண்டு எம்பிமார்.அதுக்கு அரசங்கம் சொன்ன பதில் ஆனையிறவுப்பாதையாலை ஏ 9 றோட்டாலை சனம் போக விடாமல் புலிகள் இயக்கம் தான் தடுத்து வைச்சிருக்கு,கிளாலிப் பிரதேசம் தடை செய்யப்பட்ட பிரதேசம் எண்டு எண்டு அவையள் போகாத ஊருக்கு வழி சொல்லிச்சினம்.இதுவும் புலிகளுக்கு பெருத்த பிரச்சனையாகப் போச்சுது தாங்கள் களத்திலை இறங்கினாத்தான் சரி என்ற முடிவுக்கு வந்திச்சினம்.அப்ப இவ்வளவு நாளும் புலிகள் பாதுக்காப்புப் குடுக்கேலையோ என்று கேட்பியள் சும்மா இரண்டு படகு அங்கையும் இங்கையும் ஓடித்திரியும் .நேவிட்டையோ அல்லது கெலியிலை வாற ஆமிட்டையிருந்தோ பாதுகாப்பு குடுக்கிற அளவுக்கு அவயிட்டை வசதி இருக்கேலை.இப்ப தவிர்க்க முடியாத கட்டம் வந்தவுடனை கடற்புலிகள் காவலுக்கு வந்திச்சினம்.



சனத்துக்கும் கொஞ்சம் நம்பிக்கை ஏனெண்டா வல்வெட்டித்துறை முல்லைத்தீவு பகுதியளிலை கொஞ்ச நாள்களுக்கு முதல்தான் நேவிக்கப்பல்கள் கடற்புலியளிட்டை அடிவாங்கியிருந்தவை அதாலை சனம் கடற்புலிகளை நம்பி கிளாலிப்பாதையை பயன்படுத்தத் தொடங்கியது.

நான் முதல் சொன்ன மாதிரி வலுக் கூடிய இயந்திரங்கள் பூட்டப்பட்டு ஒன்றோடை ஒண்டு கட்டப்பட்டு படகுகள் பயணம் போகத் தொடங்கிச்சுது.வழியடையாளம் ஓலைகள்.கடற்புலிகளின்ரை படகுகள் ரோந்து போகத் தொடங்கிச்சினம்.புலியளின்றை படகுகள் களத்திலை இறங்கின உடனை அதுவே ஆமிக்கும் வாய்ப்பாப் போச்சுது ஏனென்டா கடற்புலியளிட்டை இருக்கிற பெரிய படகுகள் ஆழம் குறைஞ்ச பகுதியிலை போக மாட்டுது ஆனால் நேவி வைச்சிருந்த வோட்டர் ஜெற் எண்டு சொல்லுற அதிவேகப்படகுகள் ஒரு அடி ஆழத்தண்ணிக்குள்ளையும் போகும்.இதாலை நிலமையைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி காவலுக்கு வரும் கடற்புலியளை அழிக்கவும் போக்குவரத்து செய்யுற பொதுமக்களை சாட்டோடை சாட்டா கொன்று தள்ளவும் நேவி முயன்றுது.


கிளாலிப் பாதை இரண்டு பக்கமும் தங்கடை பலத்தை பரீட்சை செய்து பார்க்கிற களமா மாறிப் போச்சுது தினம் தினம் சண்டைதான்.இரவு 8 மணியளவிலை புலியளின்ரை படகுகள் உலாப்போகும் போய் நேவி தென்படவில்லை என்ற உடனை ஒரு தொகுதி பொதுமக்களின்ரை படகுகள் போகும்.இது பூநகரியிலையும் ஆனையிறவிலையும் இருக்கிற நேவியின்ரை ராடரிலை தெரிந்தவுடனை நேவிப்படகுகள் தயாராகும் சனத்தின்ரை படகுகள் கடல் மத்திக்கு வரும் வரை பார்த்திருந்து விட்டு நேவிப்படகுகள் பாய்ந்துவரும் பிறகென்ன கடற்புலியளின்ரை படகுகள் துரத்தும் இவர்கள் ஓட அவர்கள் கலைக்க அவர்கள் ஓட இவர்கள் கலைக்க கிளாலி அல்லோலகல்லோலப்படும்.சனம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு பயணம் போகும்.இப்பிடி சண்டைக்கு இடையிலை அம்பிட்டு கொஞ்சப்பேர் செத்துப் போனார்கள்.சண்டையிலை தங்களுக்குத் தோவியெண்டா ஆனையிறவிலையிருந்தும் மண்டைதீவிலையிருந்தும் கிளாலிக்கு ஷெல் அடிப்பாங்கள் அதிலையும் கொஞ்சம் காயப்பட்டும் செத்தும் போனது.

இப்படியாக வெறுமனே போய் வாற பாதைக்குக் கூட தைழ்ச் சனம் நிறைய விலை குடுக்கவேண்டியிருந்தது.அக்கரையிலும் இக்கரையிலும் இருக்கிற உறவுகளை இணைக்கும் ஒரே வழியான கிளாலியே சிலவேளைகளில் உறவுகளை நிரந்தரமாகப் பிரித்துவிடும் இடமாகவும் மாறியது.அப்பா வியாபார நிமித்தம் அடிக்கடி கொழும்பு போவார் நான் மோட்டார் சைக்கிளில் ஏத்திக் கொண்டு போய் கிளாலியின் இக்கரையில் விடுவேன்.அப்போது ஊரடங்கு எதுவும் இல்லை அதாலை நடு இரவிலையும் திரும்பிப் போகலாம் நான் போகமாட்டன்.இப்படிப்பட்ட பாதையாளை அப்பாவை விட்டுவிட்டு எப்படி நான் மட்டும் நிம்மதியாக வீடு போக முடியும் வீட்டில் அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தை விடியும் வரை பார்த்துக் கொண்டிருப்பதைவிட கிளாலியின் இக்கரையில் இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதாகப் பட்டது.அதைவிட முக்கியமான ஒன்று அன்று இரவு எந்தவித அசம்பாவிதமும் நடக்கேலையெண்டா அப்பா நல்லபடி அக்கரை போய்ச்சேர்ந்திட்டார் என்று அர்த்தம் அந்த நல்ல சேதியை விடிந்தவுடனை ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி அம்மாவின் முகத்திலை தோன்றும் நிம்மதியைப் பார்ப்பது என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இந்த நேரத்திலை எனக்கு நிறைய கடற்புலி அண்ணாமார் பழக்கமாய்ச்சினம்.என்ன அண்ணாமார் என்று சொல்கிறேன் என்று பார்த்தீர்களா அப்போதுதான் எனக்கு 12 வயது 12 வயதில் எப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டலாம் என்றெல்லாம் கேட்கவேண்டாம் ஏனென்றால் நான் அதை 10 வயதிலை இருந்தே ஓட்டத் தொடங்கீட்டன் லைசென்ஸ் என்றெதுவும் யாழ்ப்பாணத்தில் தேவைப்படவில்லை.

தங்களுடைய வலுக்குறைந்த படகுகளுடனும் ஆயுதங்களுடனும் படையினரைச் சமாளிக்க முடியாது என்பது தெரிந்தபோது கடற்புலிகளால் களத்தில் இறக்கப்பட்டவர்களே கடற்கரும்புலிகள் என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவினர்.கரும்புலிகள் என அழைக்கப்படும் இயக்கத்தின் ஒரு படைப்பிரிவினர் கடற்புலிகளுடன் சேர்ந்து மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் இறங்கினர்.இவர்கள் வெடி மருந்து நிரப்பப்பட்ட சிறு படகுகளை ஓட்டியபடி கிளாலிக் கடற்பரப்பில் வலம்வந்தனர் இலங்கை இராணுவத்தின் கடற்படைக் கலங்கள் சண்டைக்கு வந்ததும் இவர்கள் தங்களது வெடிமருந்து நிரப்பப்பட்ட படகுகளைக் கொண்டுபோய் அவர்களது படகுகள் மீது மோதி வெடித்தனர்.இதனால் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நடமாட்டம் குறைந்தது.மக்களும் புலிகளும் வெடிமருந்து நிக்கப்பட்ட இப்படகுகளை "இடியன்கள்" என அழைத்தனர் பெயரைக் கேட்டாலே சிறீலங்கா நேவிக்கலங்கள் ஓடுமளவுக்கு பயங்கரம் நிறைந்தவை இந்த "இடியன்கள்".கிளாலியின்ரை இக்கரையிலை நிக்கிற சனம் நேவி பற்றிக் கதை வரும்போது இண்டைக்கு "இடியன்கள் "உலாவுது பயமில்லை அவங்கள் ஆமியை பார்த்துக் கொள்ளுவாங்கள் என்று கதைப்பதை கேட்டிருக்கிறேன்

வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து அக்காலத்தில் இடம்பெயர்ந்த எவரும் தம்மைப் பாதுகாப்பாக வழியனுப்புவதற்கு தம்முயிரைக் கொடுத்த இந்த "இடியன்களை" மறந்திருக்கமாட்டார்கள்.விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் என அழைக்கப்படும் தற்கொலைப்படையைப் பற்றிப் பலரும் பலவிதக் கருத்துகளையும் விமர்சனங்களையும் சொல்லும்போது நான் நினைத்துக் கொள்ளும் ஒரு முகம் இந்த "இடியன்களில்" ஒன்று நான் கும்பிடுற தெய்வம் தான் காப்பாத்திச்சுது என்று சொல்லும் ஒவ்வொருத்தரும் இந்த இடியனுக்காகவும் ஒருகணம் பிரார்த்த்னை செய்திருப்பர் என்றே நினைக்கிறேன்.

இவர்களை நாம் நேரில் பார்த்திருப்போம் ஆனால் அவர்கள் கரும்புலிகள் எண்டு தெரிஞ்சிருக்காது சாதாரணமா புலியள் மாதிரி திரிவினம்.இரவானா படகெடுத்துக் கொண்டுபோய் இண்டைக்கு நேவி சிக்குமா என்று கடலில் காவலிருப்பார்கள்.இரவில் வெடியோசை கேட்கும் போது யார் பெத்த பிள்ளையோ என்று சொல்லும் வாயோடை கண்ணிலை வழியும் நீரைத்துடைச்சுவிட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.


Posted by Eelanathan at May 16, 2004 11:24 AM

ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-1
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-2
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள்-3

Donnerstag, Mai 13, 2004

புத்திசாலிச் செருப்பு

adidas_computerized.pngபுத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது செருப்பே புத்திசாலியாகிவிட்டது. நேற்றைக்கு டிஸ்கவரியில் அடிடாஸின் புதிய காலணியைப் பற்றிய விளக்கத்தைப் பார்த்தேன். உலகிலேயே முதன் முறையாக நுண்செயலி பொருத்தப்பட்ட காலணியை அடிடாஸ் வடிவமைத்திருக்கிறது. ஏன் நுண்செயலி ஓடும் பரப்புக்கு ஏற்றபடி (தார் ரோடு, மண் தரை, புல்வெளி) உங்கள் காலின் அழுத்தம் மாறுபடும் அடிடாஸின் இந்தக் காலணியிலிருக்கும் பாலிமர் நுரைப்பஞ்சுகளின் அழுத்தம் மற்றும் தகவுதிறன் முதலாம் அடியில் கணக்கிடப்பட்டு, கால் அடுத்ததாகத் தரையில் பாவுவதற்கு முன்பு மாற்றியமைக்கப்படும். இந்த முறையில் உயவைக் குறைப்பதன்மூலம் பந்தய வீரரின் வேகம் அதிகரிக்கப்படும், கூடவே வீரரின் உடம்பிலிருந்து தரைக்கு மாற்றப்படும் சக்தி குறைவதால் வீரரின் சக்தி விரயம் தடுக்கப்படுகிறது.

adidas_closeup.pngகுதிகால் பகுதியில் இருக்கும் இந்த மிகச் சிறிய எலெக்ட்ரானிக் அமைப்பு தொடர்ச்சியாக பரப்பின் தன்மையையும் அணிபவரின் ஓட்டவீதத்தையும் கணக்கிட்டு தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொள்கிறது. தற்சமயம் பாவனையாளர்கள் பரப்பின் தன்மைக்கு ஏற்றபடி வேவ்வேறு காலணிகளை மாற்றிக் கொள்கிறார்கள். என்னுடைய அலுவலக நண்பன் கோடை காலத்தில் மிதிவண்டியில் வரும்பொழுது ஒரு காலணியில் வருவான், பின்னர் ஆய்வகத்தில் வேறு, மதிய உணவு இடைவேளையில் விளையாட்டுக் கூடம் போய் உடற்பயிற்சி செய்ய ஒரு காலணி, மாலையில் டென்னிஸ் விளையாட வேறு காலணி, மீண்டும் மிதிவண்டி காலணி என்று மாற்றிக் கொண்டே இருப்பான். இதற்கு முக்கிய காரணம், கடினப்பரப்பில் பாவிக்க ஏற்றபடி செய்யப்பட்ட உடற்பயிற்சி காலணி, புல்தரையில் டென்னிஸ் ஆட ஏற்றதில்லை. ஆனால் அடிடாஸின் இந்தக் காலணி பரப்புக்கு ஏற்றபடி தன்னைத்தானே மாற்றிக் கொள்வதால் எல்லா பரப்புகளிலும் பயன்படும்.

டிஸ்கவரியில் இதை வடிவமைத்த குழுவிலிருந்து ஒருவரை பேட்டி கண்டார்கள். அவரிடம் மூன்றுவருடங்களாக நடந்துவந்த இந்தக் கண்டுபிடிப்புத் திட்டத்தின் முக்கியச் சிக்கல் என்ன என்று கேட்டதற்குப் பொருத்தப்படும் மின்சாதனத்தின் எடையை காலணியின் மொத்த எடையான 400 கிராமிற்குப் பத்தில் ஒரு பங்காக (40 கிராம்) வைத்திருப்பதுதான் என்று சொன்னார்.

விலை அதிகமில்லை. 250 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால் இந்தக் காலணி பல்வேறு விதமான காலணிகளை வாங்குவதைத் தவிர்ப்பதாலும், தேய்மானத்தைக் குறைத்து நீண்ட நாட்கள் உழைக்க வல்லது என்பதாலும் இதன் விலை பொருத்தமானதாகத்தான் இருக்கும்.

நன்றி - வெங்கட்

Freitag, Mai 07, 2004

மனமுள்

சுமதி ரூபன் குறும்படம் தயாரித்திருக்கிறார் என்பதை சில வாரங்களின் முன் அறிந்த போது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது. எமது சமூகத்தில் பெரும்பாலும் இப்படியான விடயங்கள் ஆண்களுக்கென்றே முத்திரை குத்தி வைக்கப் பட்டுள்ளன. அந்த விதிகளை விலக்கி இன்னும் இன்னும் பெண்கள் இப்படிப் பல்துறைகளிலும் முன்னுக்கு வரவேண்டும்.

சுமதிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இங்கே சுமதி ரூபன் தயாரித்து வழங்கிய குறும்படம்.
மனமுள்

Donnerstag, Mai 06, 2004

இளைஞனின் குறும்பூவிலிருந்து

திரைப்படம்: Power

இந்த இரவு
பெண்களின் துயரம் போல
ஏன் நீள்கிறது?

இந்தப் பனித்துளி
பெண்களின் கண்ணீரைப் போல்
ஏன் சுடுகிறது?

பெண்மையை இருட்டும்
இந்தக் கேள்வி இருட்டை
எப்போது விரட்டப் போகிறாய்?

வா சூரியனே வா வா
இந்த இருட்டின் தலையில்
ஒரு குட்டு வை
ஒரு குட்டு வை

பெண்களின் பாதையில்
புதிய வெளிச்சத்தைக்
கொட்டி வை

நன்றி - இளைஞனின் குறும்பூ

Montag, April 19, 2004

காந்தியடிகளின் கடைசி நிமிடம்



- ராஜாவின் நினைத்தேன்.. எழுதுகிறேன்...இலிருந்து
மஹாத்மா காந்தி சுடப்பட்ட போது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம்

நன்றி - ராஜா - நினைத்தேன்.. எழுதுகிறேன்...

Montag, April 12, 2004

Samstag, Februar 07, 2004

முஸ்லிம் சமூகம் தந்த முதல் பெண் தமிழ் எழுத்தாளர்

சித்தி ஜுனைதா பேகம்

முஸ்லிம் சமூகம் தமிழகத்தில் ஒரு சிறுபான்மை சமூகம். மற்றைய சமூகங்களை ஒப்பு நோக்கையில் படித்தவர் விழுக்காடு குறைவாகவுள்ள சமூகம். மொத்த இந்திய நாட்டிலே பெண்களின் படிப்பறிவு குறைவாக இருக்கும் போது சிறுபான்மை இனத்தைச் சொல்ல வேண்டியது இல்லை. மேலும் பெண்கள் குடும்பம் தவிர கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் என்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்த வைத்த ஒரு பெண் ஆசிரியை, பதிப்பாளர் சித்தி ஜுனைதா பேகம் அவர்கள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம் சித்தி ஜுனைதா பேகம் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதைவிட எழுதிக்குவித்தார் என்பதே உண்மை. ஒரு பெண் எழுதும் போது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்து இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார்.

இத்தகைய ஆச்சர்யமான பெண்மணியை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது துபாய் நகரில்தான். ஷார்ஜா தமிழ் மன்றத்தில் என்னைப் பேச அழைத்திருந்த திரு.சடையன் சாபு அவர்கள் இந்த அம்மையார் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரையைக் காட்டினார். இப்படி நூதனமாக இலக்கியப்பாதை வகுத்த சித்தி ஜுனைதா பேகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, அவரது படைப்புகளை இலத்திரன் பதிவுகளாக முதுசொம் கூடத்தில் நிரந்தரப் படுத்த நான் அவர் வாழ்ந்த நாகூருக்குப் பயணப்பட்டேன்.

இவர் எழுதிய 'காதலா? கடமையா?' என்பது தமிழ் முஸ்லிம் பெண் எழுதிய முதல் நாவல் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. இதைப் பெறுவதே என் பிரதான நோக்கமாக இருந்தது. நண்பர் சாபு அவர்கள் நாகூரில் வாழும் சொல்லரசு ஜாபர் முகைதீன் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இவர் ஆச்சிம்மாவின் (சித்தி ஜுனைதா பேகம்) பிள்ளை போன்றவர். ஆச்சிம்மாவிற்கு பெண்ணும், பெண் வயத்துப் பேரனும் உண்டு, சகோதரி (half sister) யின் மூலமாக பிள்ளை உண்டு - முகம்மது ர·பி (கவிஞர் நாகூர் ரூமி) (இவரது அறிமுகக் கட்டுரை இங்கு இடம் பெறுகிறது). சொல்லரசு அவர்களும் சித்தியின் படைப்புகள் தமிழுலகம் அறிய வேண்டி நேர்காணல், கட்டுரை எழுதியவர். (இவரது நேர்காணல் இங்கு இடம் பெறுகிறது). எனவே இவரிடம் அந்த நூல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் நாகூர் சென்று விட்டேன். ஆனால் இவரிடம் அந்த நூல் இல்லை. என்னை ஆச்சிம்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களிடமும் அந்த நூல் இல்லை! ஆனால், புத்தகத்தின் ஜிராக்ஸ் நகலொன்றை முகம்மது ர·பியிடம் (ரூமி) தான் கொடுத்ததாக சொல்லரசு என்னிடம் சொன்னார். ஆனால் ரூமி அவர்கள் நாகூரில் இல்லை! எழுத்தாள நண்பர் இரா.முருகன் அவர்கள் ரூமியை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த நூலைச் சென்னையில் ஒரு வழியாகப் பெற்றுத் தந்தார். அது 1938-ல் வெளியாகியுள்ளது. அதன் இலக்கப்பதிவை சென்னை சா·ப்ட் வியூ நிறுவன இயக்குநர் ஆண்டோ பீட்டர் அவர்கள் செய்து தந்தார்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்களின் பேரன் செல்லமணி ஆச்சி கைப்பட எழுதிய பல டைரி போன்ற பக்கங்களையும், அவர் நூருல் இஸ்லாம் என்ற பத்திரிகையில் எழுதிய 'மலைநாட்டு மன்னன்' என்ற தொடர் கதையையும் முதுசொம்மில் நிரந்தரப்படுத்த என்னிடம் தந்தார்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்களின் முதல் நாவலை இலக்கப் பதிவாக தமிழ் கூறும் நல்லுகிற்கு அளிப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கிறது. மூலத்தின் இலக்கப் பதிவையும் நல்குகிறது. மேலும் தொடர்ந்து அவரின் நூல்கள் முதுசொம் கூடத்தில் பொது வாசிப்பிற்கு வைக்கப்படும்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண். அது அவரது இல்லத்தின் நுழை வாயிலில் தொங்கும் பலகையிலேயே தெரிகிறது. தமிழ் ஆண்கள் BA, MA, PhD என்று பெருமையாக போர்டு போட்டுக்கொள்ளும் தமிழ் சூழலில் இவர் 'சித்தி ஜுனைதா பேகம் - பன்னூலாசிரியை' என்று பலகை போட்டுள்ளார். இவரது பெண் என்னிடம் சொன்ன சேதி, சித்தி ஜுனைதா பேகம் தனது பெண்ணின் படிப்பில் மிக கவனமாக இருந்தார் என்பது. தான் படிக்காத படிப்பை தனது பெண் படித்துவிட வேண்டும் என்று அவரை பள்ளி இறுதிவரை படிக்கவைத்துள்ளார். சகோதரி வயிற்றுப் பிள்ளையும், பேரனும் மேற்படிப்பு படித்து ஆங்கில விரிவுரையாளர்களாக உள்ளனர்.

சித்தி ஜுனைதா பேகம் தீர்க்கமான கொள்கையும், விடுதலை உணர்வும் கொண்ட பெண்ணாகத் திகழ்கிறார். தனது இஸ்லாம் சமூகத்தில் சாதிகள் கிடையாது எனினும் தமிழ சாதி வேறுபாடுகள் பற்றி மிக அக்கரை கொண்டிருக்கிறார். திருமூலரின் வசனமான 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று தமிழர்கள் வாழவேண்டுமென வலியுறுத்துகிறார். இவரது சமய சமரச சன்மார்க்க நோக்கு இவரது கதைகளில் மிளிர்கிறது. இஸ்லாமை முதன்மைப் படுத்தி இவர் எழுதியிருந்தாலும், மூன்றில் ஒரு பங்குக் கதைகள் இந்துப் பாத்திரங்களை வைத்தே எழுதப்பட்டுள்ளது. மேலும் இவர் சரளமாக திருமூலர். மாணிக்கவாசகர் போன்றோரை மேற்கோள் காட்டுவதிலிருந்து இவருக்கு சைவ சித்தாந்தப் பரிட்சயமும் இருப்பது தெரிகிறது. இவரது நடை 'மென்னடை' என்று பலர் போற்றுகின்றனர்.

அந்நடையை நீங்களும் வாசித்து மகிழ சித்தி ஜுனைதா பேகத்தின் இலக்கிய கூடத்திற்கு வாருங்கள்.


அன்புடன்
நா.கண்ணன்
முதுசொம் இலக்கியக் கூடம்
ஜெர்மனி ஜூன் 22, 2002

Mittwoch, Februar 04, 2004

Dienstag, Februar 03, 2004

என்னை அன்பு செய்யுமாறு...

என்னை அன்பு செய்யுமாறு
நான் யாரையும் வருத்திட முடியாது.
நான் செய்யக் கூடியதெல்லாம்
அன்பு செலுத்த தகுந்தவனாக
என்னை மாற்றிக் கொள்வதுதான்.
பிறகு அவர்கள் விருப்பம்.

நன்றி - எழில்நிலா

Freitag, November 07, 2003

தேங்காய்ச்சொட்டு

என்னைப் பாதித்த சிறுகதைகளில் ஒன்று
மார்ச் 2001 எரிமலையில் பிரசுரமான
ந.மயூரரூபன் எழுதிய தேங்காய்ச்சொட்டு சிறுகதை


தேங்காய்ச் சொட்டு
ந.மயூரரூபன்

அம்மா ஒவ்வொரு நாளும் எரிச்சலோடும், சலிப்போடும் சொல்லிக்கொண்டிருப்பா.

'அரிசிப்பையை ஓட்டைபோட்டுட்டுது'
'அப்பளத்தைக் காணேல்லை' 'தேங்காய்ப் பாதியை சுரண்டிப்போட்டுது'
இப்பிடி அடிக்கடி அம்மா முணு முணுத்துக்கொண்டிருப்பா.
இதுக்கு என்ன செய்யிறது? ஒரு நாளெண்டாலும் பரவாயில்லை.
எந்த நாளும் இப்பிடித்தான் சரியான தொந்தரவு.
என்ன செய்யலாமெண்டு யோசிச்சன். எலிப்பொறி கண்ணில் பட்டுது எனக்கு பாவமாத்தான் இருந்தது. ஆனா, என்னத்தைச் செய்யிறது?
அணில் தேங்காய்ச்சொட்டின்ரை மணத்துக்குக் கட்டாயம் வருமெண்டு எனக்குத் தெரியும்.
இந்த அணில் தேங்காய்ச் சொட்டைத்தேடி வாறதை நினைச்சுப் பாக்கேக்குள்ள நாங்கள் எந்தச் சொட்டைப் பாத்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தனாங்கள் எண்டு எனக்கு மட்டுமில்லை, வந்த எல்லோருக்கும். பிறகுகூட விளங்கேல்லைத்தான்.
சரி. வந்ததுதான் வந்தம். ஆனா. இங்க அந்த அணில் மாதிரி என்ன தொந்தரவு செய்தனாங்கள்?
நாங்களும் எங்கட பாடுமெண்டு அவங்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தம்.
ஒருதற்றை சோலிக்குக் கூடப்போகேல்லை.
நான் அந்த அணிலைக்கூட எத்தின தரம் யோசிச்சு மனமில்லாம கடைசியா அதின்ர ஆக்கினை பொறுக்கமாட்டாமத்தான்.
ஆனா நாங்கள்? இவங்கள் எங்களை இப்பிடிச்செய்யிறதுக்கு முன்னால. நான் அந்த அணிலுக்காகயோசித்த மாதிரி யோசிச்சிருப்பாங்களே.
அப்பிடி யோசிச்சிருப்பாங்களெண்டு நானெண்டா நினைக்கேல்லை.
நான் அந்தப் பொறியை ஏத்திப்போட்டுப் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.
அணில் கீச் கீச் எண்டு கத்தேக்குள்ள. நெஞ்சுக்குள்ள ஒரு தடக் பொறுக்கமாட்டோம். பொறியை விடுவிச்சு விடுவமோ எண்டும் நினைச்சன்.
இடைக்கிடை பொறி வச்ச இடத்தை ஓரக்கண்ணால் பாத்துக்கொண்டு இருந்தன்.
அணில் வரேல்லை. எனக்கு அப்பிடிப்பாத்துக் கொண்டிருக்கத் தைரியமில்லை எழும்பிப்போய்விட்டேன்.
எங்களை அதுதான் என்னையும் என்ர சினேகிதியையும் பிடிச்சுக்கொண்டு போகேக்குள்ள, எனக்கு இதொண்டும் நினைவுவரேல்லை. இலேசான பயந்தான் இருந்தது. விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவாங்கள்தானே.
ஆனா நாலைஞ்சு ஆமிக்காரங்கள். எனக்கு பயங்கரமாய் ஏதோ நினைப்புகள்.
ஆரோ கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வந்து இருட்டுக்குள்ள தள்ளிவிட.
சுத்திவர பேயள் நிண்டு குதிக்கிற மாதிரி எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல.
மரத்துப்போன மாதிரி. ஏதோ ஒண்டு என்னைக் கவ விப்பிடிச்ச மாதிரி. அந்த நேரத்திலையும் நான் இதைத்தான் யோசிச்சன். நான் இல்லை நாங்கள் அப்பிடி என்னதான் செய்தனாங்கள்? அதுக்கு இப்பகூட விடை கிடைக்கேல்ல.
நான் அந்த அணிலுக்கு வச்ச பொறியை எடுத்து விடுவமோ எண்டு யோசிச்சமாதிரி அவங்கள். யோசிச்சிருப்பாங்களே? அப்பிடி யோசிச்சிருக்க மாட்டாங்களெண்டு அப்பத்தான் விளங்கிச்சுது. முந்திக் கேள்விப்பட்ட விசயங்களுக்கு இப்பத்தான் வடிவம் கிடைச்சுது.
நான் அந்த அணிலைப் பிடிச்சுவைச்சு, ஒரு சித்திரவதைகூடச் செய்யேல்லை. அதை சீண்டிவிட்டு வேடிக்கை பாக்கேல்லை. அதுக்குப் பல்லால கடிக்கேல்லை. நெருப்பால சுடேல்லை. அடிக்கக்கூட இல்லை. அதின்ர தன் மானத்தைச் சுடுற மாதிரி மானத்தோட விளையாடேல்லை.
ஒரே ஒரு சத்தம்தான் 'படார்.' என்று கேட்டுது. ஓடிப்போய்ப் பாத்தன், தலை பொறிக்குள்ள அம்பிட்டுது. பொறியை ஒரு சுற்றுச் சுற்றி இழுத்துப்போட்டு அடங்கிவிட்டுது கண நேரந்தான்.
ஆனால். அவங்கள் எங்களை ஒரு நாள் முழுக்க அறையுக்குள்ள அடைச்சு வச்சு. வாறவங்கள் போறவங்களெல்லாம்.
அதுகளெல்லாம் என்னத்துக்கு இப்ப
இப்பகூட அதை நினைக்கேக்குள்ள முகம் உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி. அப்பிடி ஓர் உணர்வுதான் ஆகா என்ர உடம்பு எங்கள மோசமா சித்திரவதை செய்தாங்கள். என்னென்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்தாங்கள்.
ஆரம்பத்தில் பெருங்குரலில் அலறினனாங்கள்தான், ஆனா. போகப்போக குரல் வரேல்லை. எவ்வளவு நேரமெண்டு அலறுறது. தொண்டையும் வறண்டு போட்டுது.
உடம்பெல்லாம் கந்தலாப்போன மாதிரி தொய்ஞ்சு கிடந்துது. வேதனை உடம்பெல்லாம் நோ அசைய முடியேல்லை. நெருப்புப் பிடிச்ச மாதிரி ஒரு உணர்வு. கண்களில் சூடான நீர் திரண்டு வழிஞ்சுது.
சிகரட்டுப் புண்களும், பல்லுக்காயங்களும், அடியின்ர வலிகளும் மரத்துப்போன மாதிரி நினைப்பு.
எனக்கு என் மேலேயே ஆத்திரம் வந்தது. ஏன் இன்னும் உயிர் போகேல்லை?
இருட்டினாப்பிறகு இரண்டு பேர் வந்தாங்கள். என்னையும் என்ர சினேகிதியையும் இழுத்துக்கொண்டு போனாங்கள். அந்த இருட்டுக்குள்ள சனத்தின்ர 'ஊ' என்ற ஊளையில் அது ஒரு வெளியெண்டு தெரிஞ்சுது. அதோட நடக்கப் போறதும் தெரிஞ்சுது.
அணில் பொறியில அம்பிட்டவுடன் நான் அம்மாவைக் கூப்பிட்டன்.
அதை அங்கால தூக்கிக் கொண்டு போகச் சொல்லிக் கத்தினன்.
அம்மா குசினிக்குள் இருந்தபடியே என்னையே தூக்கிக்கொண்டு போய் வெளியில போடச் சொன்னா 'ஐயோ எனக்குத் தெரியாது' எண்டு நான் அந்தப் பக்கமே பாக்காமல் வெளியில ஓடிவிட்டன்.
பேந்து அதை தம்பிதான் எடுத்துக் கொண்டுபோய் வெட்டித் தாட்டவன்.
அண்டைக்கு நான் திரும்ப வீட்டுக்குள்ள போனபோது பார்த்தன், அது கொஞ்சம் பெரிய அணில் மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.
வளையில இருந்துகொண்டு வாலைத்தூக்கித் தூக்கி அடிச்சபடி கீச் கீச் எண்டு கத்திக் கொண்டிருந்தது.
அதுதாய் அணில் போல ஓ அது தான் அந்த அடிபட்டுச் செத்ததின்ர தாய் அது அண்டு முழுக்க அந்த இடத்தில் நிண்டு வாலை அடிச்சுக்கொண்டு கத்தினபடி இருந்தது.
இடைக்கிடை வளையில அங்கையுமிஞ்சையும் ஓடிப்போட்டு வந்து திரும்பவும் கத்திச்சுது.
அது தன்ர குட்டி அணிலை கூப்பிடுறது போல எனக்கு இருந்துது.
நிலைகொள்ளாமல் அது தவிச்சுக் கொண்டிருக்குது எண்டு நான் ஊகிச்சன்.
எனக்கு சரியான கவலையாயிருந்துது. அந்தத் தாயணில் அழுகிற மாதிரி ஒரு நினைப்பு.
எனக்கு அண்டைக்கு நித்திரையே வரேல்லை.
அழுது கொண்டுதான் படுத்திருந்தன். இப்ப எனக்கு இந்த தாயணிலை நினைக்கேக்குள்ள என்ர அம்மான்ர நினைப்புத்தான் வரும்.
அவவும் இப்பிடித்தான் ரியூசனுக்குப் போன பிள்ளை வருகுது.. வருகுது எண்டு வாசலையே பார்த்துக்கொண்டு நிண்டிருப்பா.
எத்தின நாள் சாப்பாடில்லாம சுருண்டிருப்பா. எவ்வளவு இரவுகள் நித்திரையில்லாம கண்ணீர்விட்டுப் புலம்பியிருப்பா
எனக்கு இப்பவும் கவலையாத்தான் கிடக்குது. எங்களுக்கு முதல் புதைஞ்சவையெல்லாம் கிண்டித் தூக்கி ஆராய்ச்சி செய்யினம். அம்மாவுக்கு அது என்ர நினைப்பை இன்னும் நல்லாக்கிளறி விட்டிருக்குமெண்டு நினைக்கிறன்.
அங்க அம்மா என்னை அடையாளம் காண காத்துக்கொண்டிருப்பா.. அது சரி அந்தக் குட்டியணிலின்ர கதிமற்ற அணிலுகளுக்கும் தெரிஞ்சிருக்குமோ?
தெரிஞ்சிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.
அப்பிடித் தெரிஞ்சிருந்தா தேங்காய்ச்சொட்டைத் திரும்பிப் பாக்குங்களே.
ஆனா எங்களைப் பற்றித் தெரிஞ்சிருந்தும் எத்தின பேர் அந்தச் சொட்டை சுவடெடுத்துத் தேடி வருகினம். இதுக்கு என்னத்தைச் செய்யுறது.
ம். எனக்கேன் மற்றாக்களைப் பற்றிக் கவலை?
அம்மாவை நினைக்க ஓ அந்தத் தாயணில் தன்ர குட்டியணிலின்ர உடல் கூட்டை கடைசி வரையும் கண்டிருக்காது.
அது மாதிரி அம்மாவும்.

nantri-erimalai

தேங்காய்ச் சொட்டு சிறுகதை மிக மிக அருமையாக இருந்தது. எலிப்பொறியில் சிக்கிய அணிலும் சிறீலங்கா இராணுவத்திடம் சிக்கிய தமிழனும்- ந.மயூரரூபன் அதை எழுதிய விதம்- நிட்சயமாக அவர் அந்த அவஸ்தையை அனுபவித்துத்தான் எழுதியிருப்பாரோ என்று என்னைச் சிந்திக்க வைத்தது. வாசித்து வெகுநேரமாகியும் .. நாட்கள் நகர்ந்தும் மனசை விட்டகலாமல்.. இன்னும் என்னை என்னவோ செய்கிறது.

சந்திரவதனா. செல்வகுமாரன்
சுவாபிஸ்கால், ஜேர்மனி.

பிரசுரம் - எரிமலை(http://www.erimalai.com/2001-may/akkarai_pookkal.html)